![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்
|
நெஞ்சு பொறுக்குதில்லையே....இலக்கில்லா பயணம்.... இனம்காக்க கருவியெடுத்து... இன்னோர் இனத்தில் களையெடுப்பு!!?.... பிணங்களின்மேல் சப்பனமிட்டு கொக்கரிப்பதுதான் கொள்கைப்பிடிப்பா?!! உன் கொள்கைகள் கொலைக்களங்களில்தான் குறிப்பிலேற்றப்படுமா?! உன்னால் உருவாகும் இ(கொ)லையுதிர்காலங்களால் வேதனைகள்...வேர்களுக்கல்ல..... நியதிகள் மறந்து.. நிழல்களில் வாழ்ந்து... நீதிகள் வென்ற வரலாறுண்டா?!! ஆட்கொல்லி நோய்க்கெல்லாம் ஆராய்ச்சிகள்...நிறுத்துங்கள்... முதலில்... இந்த தீவிரவா(வியா)திகளுக்கு?!! மனங்கள் மரத்துப்போனால் கரங்களும்.... கடவுளே விதிகளை திருத்தி...வீதியில் நிறுத்து... கல்விக்களத்தில் கருவிகள்... தோகை நெஞ்சில் தோட்டாக்கள்... பனிப்பூக்களை தொட்டுப்பார்த்திருக்கிறாயா... பணயக்கைதிகளை சிறைபிடிக்கும்முன் எங்கே பணயம் வைத்தீர்கள்...உங்கள் மனங்களை?!!.. பால்குடிக்கும் பிஞ்சுகளில் குருதி உறிஞ்சிய அட்டைப்பூச்சிகளே..... மலிவுவிலையில் கிடைப்பது மனித உயிர்கள்தானென உம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? மதம்பிடித்த யானை... மற்றோர் யானையை கொல்வதில்லை... ஆறறிவு மனிதன்....???!!! ஆதிவாசிகளெல்லாம் மாமிசம் தின்பதில்லை... நகரவாசிகள் கழுகுகளாய் மாறிவிட்டபின்... இன்னும் எத்தனை நாட்கள்.... பிணம்தின்னும் சாஸ்திரங்களும்.. கொலைசெய்யும் கொள்கைகளும்..... posted by Poo at 9/04/2004 01:58:00 PM (Popup)(Show/Hide) 2 comments ![]()
|
அன்புள்ள பூவேந்திரன்,
தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். தாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவரா?
ஏன் www.pudhucherry.com இதழில் எழுதக் கூடாது?
அன்புடன்
இராஜ.தியாகராஜன்
அன்புள்ள பூவேந்திரன்,
தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். தாங்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவரா?
ஏன் www.pudhucherry.com இதழில் எழுதக் கூடாது?
அன்புடன்
இராஜ.தியாகராஜன்